ரம்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

Written by vinni   // November 30, 2013   //

10-ramya-14-600இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் எம்.பி ரம்யாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரம்யா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமான கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து, பொல்லாதவன் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் இளையவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடிய ரம்யாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியினை இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரம்யா, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து விடயங்களிலும் உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் அன்பும், ஆதரவுமே என்னைச் செயல்படத் தூண்டுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்


Similar posts

Comments are closed.