தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி

Written by vinni   // November 30, 2013   //

phoneமும்பையில் செல்போன் கீழே விழுந்தபோது அதை பிடிக்க முயன்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாகூர் மாலில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்ப்பவர் ராஜ்ஸ்ரீ ஜாதவ்(18).

இவர் அதே பகுதியில் உள்ள ககன்கிரி குடியிருப்பில் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் ராஜ்ஸ்ரீ மாடியில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை சந்தேஷ் என்ன எப்பொழுது பார்த்தாலம் கைப்பேசியும், கையுமாக இருக்கிறாய் என்று திட்டிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் 10 நிமிடத்தில் வந்த அவர் ராஜ்ஸ்ரீயை சாப்பிட வருமாறு அழைத்துள்ளார். சந்தேஷ் வீட்டுக்குள் சென்றதும் ராஜ்ஸ்ரீயின் கைப்பேசி கை நழுவி கீழே விழுந்துள்ளது.

அதை பிடிக்க முயன்றபோது அவர் நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.


Similar posts

Comments are closed.