கமரூன் இலங்கையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிருப்தி தெரிவித்து மகஜர்

Written by vinni   // November 30, 2013   //

David-Cameron-007இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அரச ஆதரவு அமைப்புநேற்று மகஜர் ஒன்றை வழங்கியது.

பிரித்தானிய இலங்கையர் ஒன்றியம் என்ற அமைப்பே இந்த மகஜரை வழங்கியது.

பிரதமர் டேவிட் கமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் பிரித்தானியாவில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த மகஜரில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரியவருகிறது.


Similar posts

Comments are closed.