சச்சினுக்கு “பாரத ரத்னா விருது” வழங்குவதை எதிர்த்து வழக்கு

Written by vinni   // November 30, 2013   //

sachin_gold_coin_002இந்தியாவின் அதியுயர்ந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்ற நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தியுள்ள சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சச்சினை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில், விருதுக்கு தேர்வு செய்தது தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கனகசபை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

சச்சினுக்கும், சி.என்.ராவ்விற்கும் பாரத ரத்னா வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாரத ரத்னா விருதிற்கான தேர்வில் மத்திய அரசு, விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை எனவும் கனகசபை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

இதேவேளை,சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அமிதாப் தாகூர் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.