20 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது ராஜபக்சக்கள் தான்; பசில் ராஜபக்ச

Written by vinni   // November 30, 2013   //

pasilபோரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று விரும்பிய சில நாடுகள் இப்போது தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில், தாம் என்ன செய்தன மற்றும் எவ்வாறு பங்களித்தன என்பதை மறந்து விட்டு சில நாடுகள் நடிக்கின்றன. பிரபாகரனை அழிக்கும் வேலையை முடிக்க வேண்டும் என்று எமக்குக் கூறியவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனால், தனது நாட்டில் உள்ள வட அயர்லாந்துக்கு செல்லமுடியவில்லை. ஆனால் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்கு அவர் அவரால் எந்தப் பிரச்சினையுமின்றி செல்ல முடிந்தது.

அங்கே சில குறைபாடுகள் இருக்கலாம், தாமதங்களும், வடக்கில் இன்னும் செய்ய வேண்டியவையும் இருக்கலாம்.ஆனால், வடக்கிலுள்ள மக்களுக்கு சிறிலங்கா அதிபர் செய்தவற்றை மதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,

நாம் அவர்களுக்கு அமைதியையும், ஜனநாயகத்தையும் கொண்டு வந்துள்ளோம்.எத்தகைய பிரச்சினைகள், வேறுபாடுகள் என்றாலும், அவற்றை தீர்க்கும் பொறுப்பு எமது கைகளில் தான் உள்ளது.அதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இங்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆளப்போவது ராஜபக்சக்கள் தான். அது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.