இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாரடைப்பு

Written by vinni   // November 29, 2013   //

vinod-kambliஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. 41 வயதான காம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பள்ளிப் பருவத்தில் இருந்தே சச்சினுடன் இணைந்து விளையாடி வந்தார்.

1988ல் நடந்த டெஸ்ட் போட்டியில் சச்சின்-காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது. இதன்மூலம் காம்ப்ளி பிரபலம் அடைந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசிக்காததால் விரைவில் தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஓய்வும் பெற்றுவிட்டார். சமீபத்தில் நண்பர் சச்சின் ஓய்வு பெற்றபோது, தன்னை பிரியாவிடை விருந்துக்கு அழைக்கவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை காம்ப்ளி செம்பூரில் இருந்து பந்த்ராவுக்கு காரை ஓட்டிச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போக்குவரத்து அதிகாரி ஒருவர் மூலம் மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு காம்ப்ளியின் இதயத்தில் இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.