மன்னாரில் இளம் குடும்பஸ்தர் முன்னாள் போராளி எனக் கூறி கைது

Written by vinni   // November 29, 2013   //

mannarமன்னாரில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை முன்னாள் போராளியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு நேற்று முன்தினம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை தெரிவித்தார்.

மன்னார் முருங்கன் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான திருச்செல்வம் கிரிஸ்துராசா (வயது-31) என்பவரை விசாரணைக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மறு நாள் 25ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இக் கைதினை உறுதிப்படுத்தும் சிட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.