அமெரிக்காவை அச்சுறுத்தும் பனி!

Written by vinni   // November 29, 2013   //

ice_cube_car_004அமெரிக்காவில் புயல் சின்னம் காரணமாக தென்கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதியில் பலத்த மழையும், சில இடங்களில் கடும் பனியும் கொட்டியது.

இதனால் விமான சேவை, தரைவழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட் பகுதியில் சுமார் 1 அடி (30.5 சென்டி மீட்டர்) பனி கொட்டியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாளாக முடங்கியது.

தற்போது நெருங்கிய உறவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணங்களை அமெரிக்கர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த வாரத்தில் சுமார் 4 கோடியே 30 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மழை, பனிப்பொழிவால் இவர்கள் குறித்த காலத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.


Similar posts

Comments are closed.