தருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக களமிறங்கிய பேஸ்பு

Written by vinni   // November 29, 2013   //

tharuதருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்து பலர் லைக் கொடுத்து வருகின்றனர்.
டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் சக பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அத்துமீறி நடந்ததாகவும் புகாருக்குள்ளாகியுள்ளார்.

அவர் மீது கோவா பொலிசார் பாலியல் பலாத்கார முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பக்கம் முளைத்துள்ளது.

அதை தேஜ்பால் ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளனர். “The Complete Truth” என்ற பெயரிலான அந்தப் பக்கத்தில், தருண் தேஜ்பால் தான் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளதை, குற்றத்திற்கான ஒப்புதலாக நினைக்கக் கூடாது. மாறாக ஒருவர் தான் எந்த அளவுக்கு பலமாக இருப்பதைக் காட்டியுள்ளார் என்று கருத வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த பேஸ்புக் பக்கத்தை 650க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

இந்த பக்கத்தில் கற்பனைக் கதைகளை யாரும் புனைய வேண்டாம். மேலோட்டமாக இதை பார்க்க வேண்டும். முழுமையான உண்மைகளை அறிய அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் டெஹல்கா பத்திரிக்கையாளரின் தனிப்பட்ட சுந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு ஆன்லைன் மனுவையும் அதில் இணைத்துள்ளனர்.


Similar posts

Comments are closed.