திருமணம் செய்யாமல் ஆணுடன் வாழும் பெண்ணுக்கு பாதுகாப்பு

Written by vinni   // November 29, 2013   //

Delhi_High_Cour2213திருமணம் செய்து கொள்ளாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் தம்பதிகளாக சேர்ந்து வாழும் நடைமுறை நாட்டில் இப்போது அதிகமாகி உள்ளது.

சில ஆண்டுகளில் இவர்களில் பெரும்பாலோர் பிரிந்து விடுகின்றனர் அல்லது இறுதி வரை சேர்ந்து வாழ்கின்றனர். இதுபோன்ற பெண்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் சட்ட பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ கிடையாது. துரதிருஷ்டவசமாக இதுபோன்ற உறவு முறை சட்டத்தால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதாலும், இயற்கை திருமணத்துக்கு முரணாக இருப்பதாலும் இந்த உறவுமுறை பிரிவுக்குப் பிறகு பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.

எனவே இதுபோன்ற பெண்களுக்கும், இந்த உறவின் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

மேலும் இந்த உறவுமுறையையும் ‘இயற்கை திருமண உறவுமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.


Similar posts

Comments are closed.