ஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்து மஹிந்த அரசை வீழ்த்தவேண்டும்; மனோ கணேசன் தெரிவிப்பு

Written by vinni   // November 29, 2013   //

manoஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்து மக்கள் விரோத அரசான மஹிந்த அரசை வீழ்த்தவேண்டும். எனவே, காலத்தை வீணடிக்காமல் மக்களின் வாக்குகளைக் கவரும் விசேட வேலைத்திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்க வேண்டும்.   இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:   உட்கட்சி பிரச்சினைகளால் காலத்தை வீணடித்து உள்ளதையும் இழக்காமல், ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டில் வாழும் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளைக் கவரும் புதிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும்.    கிராமங்களுக்கு சென்று சிங்கள மக்களுக்கு உண்மைகளை எடுத்துக் கூறும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதை இடைநடுவில் இந்தக் கட்சி கைவிட்டது.

அதை விட்ட இடத்திலிருந்து ஐ.தே.க.தொடர வேண்டும்.   தமிழ் வாக்குகளை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மேல் மாகாணத்தில் நமது கட்சியும் பாதுகாத்து பெற்றுக்கொள்வோம். மலையகத்தில் தமிழ் வாக்குகளைக் கொண்டுள்ள கட்சிகள் உரிய நேரத்தில் நமது தரப்புக்கு வரும்.

ஆகவே ஐ.தே.க. காலத்தை வீணடிக்காமல் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.   நமது சிறுபான்மை வாக்குகளுடன், சிங்கள வாக்குகளும் சேராமல் இந்த அரசை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.    இன்று ஐ.தே.கவிடம் எஞ்சியுள்ள சிங்கள வாக்குகளையும் சரத் பொன்சேகா கொண்டு போகும் அறிகுறி  தோன்றி வருகிறது. இப்படியே போனால், தமிழ் வாக்கும் இல்லை, சிங்கள வாக்கும் இல்லை என்ற நிலைமை ஐ.தே.கவுக்கு ஏற்படும்.


Similar posts

Comments are closed.