சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல்

Written by vinni   // November 28, 2013   //

sivajiகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் இன்று காலை மலர் வளையம் மற்றும் பூமாலை வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டின் முன் மலர் வளையம் வைத்து மாலை போடப்பட்டிருந்ததை இன்று காலையில் தான் பார்த்தாகவும் இரவு வேளையில் இவ்வாறு மலர் வளையம், பூமாலை வைக்கப்பட்டிருக்கலாம் என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அரச படையினரே திட்டமிட்டு இவ் அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தை அறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.