கள்ளக்காதலனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்

Written by vinni   // November 28, 2013   //

train_track_001.w245துடெல்லியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரியானா மாநிலம், ரோட்டக் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான மோனிகா.

இவர் கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் 2 வயது மகனுடன் மோனிகா மாயமானார். அதேவேளையில்,அப்பகுதியில் வசித்து வந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான அசோக் (26)என்பவரும் தலைமறைவானார்.

இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் அந்த ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் விட்டதாகவும் அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில், அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டம் அருகேயுள்ள ரோட்டக்-டெல்லி பாதையில் கள்ளக் காதலன் மற்றும் இரண்டு வயது மகன் ஆகியோருடன் நேற்று காலை ரயில் முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே பொலிஸார், சடலங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் அவ்வழியாக சென்ற ரெயில்கள் ஒருமணி நேரம் தாமதமாக செல்ல நேரிட்டது.


Similar posts

Comments are closed.