பேய் பிடிச்சிருக்கு! பெண்களை உயிருடன் எரிக்கும் கொடூரம்

Written by vinni   // November 28, 2013   //

fire1என்ன தான் நாகரிகங்கள் வளர்ச்சி பெற்றிருந்தாலும் சில மூடநம்பிக்கைகள் மக்களை ஆட்டிபடைத்து கொண்டிருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில மூடநம்பிக்கைகளால் பெண்களை உயிருடன் எரிக்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது.

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இம் மாநிலத்தில், பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும், தண்டிப்பதுமாக உள்ளனர்.

சில பெண்கள் தீ வைத்தும் எரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த, எவ்வித முயற்சிகளையும் பொலிசார் மேற்கொள்வதில்லை.

இதுதவிர இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பெண்களுக்கு எதிரான, இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பணியை அரசு ஊழியர்கள் சிலர் செய்து வருகின்றனர்.

கடந்த 1991ம் ஆண்டு முதல் முதல் 2013ம் ஆண்டு வரை 1,312 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் ராஞ்சி அருகில் உள்ள சிமடேகா மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.