பிண வாடை தாங்க முடியலையே: மாணவிகள்

Written by vinni   // November 28, 2013   //

download (1)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளுடன் மாணவ, மாணவிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவகரி அருகே இடையன்குளம் காந்திநகர் பகுதி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

இவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அலுவலக வாசலில் அமர்ந்து கொணடு அங்குள்ள தரையில் வீசி எறிந்தனர். மேலும் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.

அவர்கள் கொடுத்த மனுவில், சிவகரி அருகே காந்தி நகரில் சுமார் 70 குடும்பங்கள் உள்ளன. எங்கள் வீடுகளின் அருகே இடுகாடு உள்ளது. அங்கு பிணத்தை எரிப்பதால் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

எங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கூறி ஏற்கனவே இங்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் எங்கள் பகுதியில் இறந்த ஒருவரை அடக்கம் செய்ய விடாமல் மற்றொரு பகுதியினர் தடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இடுகாட்டை மாற்றம் செய்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.