காங்கிரஸ் என்னை பழிவாங்குகிறது! ஜெயலலிதா

Written by vinni   // November 28, 2013   //

jayalalithaதமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்காடு மின்னாம்பள்ளியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுக்காலத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் மின்வெட்டு சீரனதாக இருந்தது.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையங்களில் ஒரே நேரத்தில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் அனுமின் நிலையங்களிலும் உற்பத்தி இழப்பு என்பது தொடர் கதையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை உறுதியுடன் எதிர்கொண்டு தமிழகத்தின் மின்வெட்டு நிலை சீரமைக்கப்படும் என்றும் மின்பற்றாக்குறையை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.