சச்சினை புகழாதீர்கள்! தலிபான்கள் எச்சரிக்கை

Written by vinni   // November 28, 2013   //

sachinஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை புகழக்கூடாது என்று பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் கமாண்டர் மிரட்டல் காணொளி டேப் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், இந்தியரான சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.