இப்படியும் திருடனா! சீனாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

Written by vinni   // November 27, 2013   //

iphone5_0_051209051170திருடர்களுக்கும் மனசாட்சி உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, ஐபோன் காணாமல் போனது.

தனக்கு பின் அமர்ந்திருந்த ஒருவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட ஷோயூ, தனது நண்பரின் தொலைபேசியில் இருந்து ஒரு குறுந்தகவை தனது ஐபோனிற்கு அனுப்பினார்.

அதில், நீ யார் என எனக்குத் தெரியும். காரில் எனது பின்னால் அமர்ந்திருந்தவன் தான் நீ என உறுதியாக என்னால் சொல்லமுடியும். விரைவில் உன்னைக் கண்டுபிடிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த திருடன், அடுத்த சில நாட்களிலேயே ஷோயூவுக்கு ஒரு பார்சல் அனுப்பியுள்ளான்.

அதில் அவரது சிம்கார்ட்டுடன் ஐபோனில் இருந்த 1000 தொடர்பு எண்களைக் கிட்டத்தட்ட 11 பக்கங்களில் கையாலேயே எழுதி அனுப்பி இருந்தான்.

திருடனாக இருந்த போதும், மனசாட்சியோடு நடந்து கொண்டதாக திருடனின் செய்கையை குறிப்பிட்டு சீனப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


Similar posts

Comments are closed.