தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்திய தீவுகள் அணி பரிதாபம்

Written by vinni   // November 27, 2013   //

india_westindies_3odi_007மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.

இதில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 71 ஓட்டங்களும், பாவெல் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 264 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர்.

4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த ரோஹித் சர்மா, ராம்பால் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

அவருடன் இணைந்த கோஹ்லி 19 ஓட்டங்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஷிகர் தவானும், யுவராஜ் சிங்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

பந்துகளை பவுண்டரிகளாக விளாசிய ஷிகர் தவான், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5-வது சதத்தை பதிவு செய்ததுடன் 119 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அரைசதம் கடந்த யுவராஜ் சிங், 55 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

முடிவில் 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களை எடுத்தது.

இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.


Similar posts

Comments are closed.