பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால் பயன்படுத்தலாம்: ஐ.நா. தகவல்

Written by vinni   // November 27, 2013   //

imagesஉலக நாடுகளில் பெருமளவில் பசும்பால் உணவு பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. அவை தவிர சிலர் ஓட்டகம், ஆடுகள், கழுதைகள்,  எருமைகள், கலைமான்கள் போன்றவற்றின் பால்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அங்கீகரிக்கப்பட்ட பாலாக பசும்பால் திகழ்கிறது. ஏனெனில் அதில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது. சர்வதேச அளவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே செல்கிறது.

அதனால் போதிய அளவு பசும்பால் கிடைக்கவில்லை. எனவே, அதற்கு பதிலாக வேறு ஒரு உயிரினத்தின் பால் அங்கீகரிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ‘மூஸ்’ இன மான் மற்றும் கலைமான் பால் பயன்படுத்தலாம் என ஐ.நா. சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசும் பால் போன்றே அதில் அதிக அளவில் கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்தும் உள்ளது. அத்துடன் பசும்பாலில் இருக்கும் ‘லேக்டோஸ்’ பாதி அளவு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது


Similar posts

Comments are closed.