ரொரொன்ரோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளுக்கான ஆயத்தங்கள்.

Written by vinni   // November 27, 2013   //

toronto-2013-maveerarday-001ரொரொன்ரோவில் Markham Fairground என்ற பெரு நிலப்பரப்பில் மிக சிறப்பாக மண்டபம் எழுப்பப்பட்டு பிரமாண்டமான அரங்கம் அமைத்து ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாளுக்கான ஆயத்தங்கள்.. ஊர் கூடி வடம் இழுத்தால் தேர் வந்து சேர்ந்தே தீரும்.. பல தொண்டர்கள் இரவிரவாக மண்டபத்தில் கூடி இருந்து அரங்க அமைப்பு வேலைகளை செய்து கொண்டு இருகின்றார்கள். இன்னமும் 4 1/2 மணி நரம் மட்டுமே உள்ளது.. ஒரே அரங்கில் நான்கு நிகழ்வுகளாக மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

உலகெங்கும் மாவீரர்களை வணங்கி மக்கள் தன்னெழுச்சி கொள்ளும் உன்னதமான இந்நாளில் கனடிய தமிழ் மக்களும் அந்த உணர்வில் திளைத்து எழுச்சி பெற உறங்காத விழிகளோடு காத்திருக்கின்றார்கள்…விடியாத இருளோடு எம் மக்கள் எம் மண்ணில்… மடியாத துயரோடு வாழும் எம் மக்களை நினைவூட்டி மண்ணின் விடுதலையை வென்றெடுக்க எம்மை காலக் கடனாற்ற எங்கள் காவல் தெய்வங்கள் எம்மை அழைக்கும் குரல் எம் உயிர்களுக்குள் கேட்கும்! விழி மூடாமலே விடியல் காண ரொறொன்ரோ வாழ் தமிழ் மக்கள் நாம் காத்திருக்கின்றோம்… எம் மாவீரசெல்வங்களை கார்த்திகைப் பூ தூவி வழிபட துடித்தபடி காத்திருக்கும் தமிழர் இதயங்கள்.


Similar posts

Comments are closed.