யாழ்.பல்கலைக்கழக சூழலில் பதற்ற நிலை

Written by vinni   // November 27, 2013   //

DSC_0473.jpgயாழ்.பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் நடமாடக் கூடாது என இராணுவத்தினரும் பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மாலை உலக முழுவதிலும் உணர்வு பூர்வமாக அனுசரிக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக சூழலில் பதற்ற நிலை நிலவுகின்றது.

பெருமளவான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக சூழலில் பிரயாணம் செய்யும் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.

இந்நிலையில் பல்கலைக்கழக சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் நடமாடக் கூடாது என இன்று மதியத்திற்கு பின்னர் இராணுவத்தினர் எச்சரித்து வருகின்றனர்..

பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் நடமாடுகின்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தி வருகின்றனர்.

அத்தோடு ரோந்துப் பணிகளும் நேற்று மாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சூழலில் பெரும் பதற்ற நிலையில் ஏற்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.