சீன படைகளின் பிரதி தலைமை கட்டளை அதிகாரியும் கோத்தபாயவும் சந்திப்பு!

Written by vinni   // November 27, 2013   //

Lieutenant_General_Wang_Guanzhong-2-450x299மக்கள் சீன குடியரசின் இராணுவப் படைகளின் பிரதி தலைமை கட்டளை அதிகாரி லெப்டினட் ஜெனரல் வேங்க் குவாங்ஸ் ஹொங் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சீன இராணுவ அதிகாரியுடன் மேலும் சில இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1970 ஆம் ஆண்டு சீன இராணுவத்தில் இணைந்து கொண்ட ஹொங், அந்நாட்டு இராணுவத்தில் கட்டளை, நடவடிக்கை மற்றும் நிர்வாக பிரிவுகளில் பதவிகளை வகித்து வந்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் அவர் சீன இராணுவத்தின் பிரதி தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.