மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும் : மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பவர்கள் பயங்கரவாதிகள்

Written by vinni   // November 27, 2013   //

guஇலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என நினைத்தால் மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகள் என்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்ற ஒன்று இருந்ததை மறப்பதே தமிழர்களுக்கு நல்லது.

அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. பயங்கரவாதம் மீண்டும் உருவாக்காத வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கான ஒரு தினம் இலங்கையில் அனுஷ்டிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான தினத்தை அனுஷ்டித்து முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்த கூடாது.

நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் மற்றும் ஏனைய பயங்கரவாதிகளுக்கு ஒரு தினத்தை அனுஷ்டிப்பது இலங்கையில் இன்னும் விடுதலைப் புலிகள் வாழ்கின்றனர் என்பதை புலப்படுத்துகிறது.

புலிகளுக்கு ஆதரவான நினைவஞ்சலிகளை புலிப் பயங்கரவாதிகள் மட்டுமே அனுஷ்டிப்பர். நாட்டை நேசிக்கும் எவரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தவறிழைக்கக் கூடாது. சர்வதேசத்தின் அச்சுறுத்தல் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் போக்கும் என்று அஞ்சி இந்த சிங்கள தேசத்தை இழந்துவிடக்கூடாது.

இந்த நாட்டில் சிங்கள இனத்தவரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் நிலைப்பாடுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு. பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை வடக்குத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சக்திகளுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.


Similar posts

Comments are closed.