போதையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு: உயிரை விட்ட மனைவி

Written by vinni   // November 27, 2013   //

beer_bottle_001.w245சேலம் மாவட்டத்தில் கணவன், மனைவிக்கிடையே சரக்கடிப்பதில் ஏற்பட்ட தகராறால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலம் ஊராட்சி, பெலாக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெள்ளையன்(45). இவரது மனைவி வெள்ளச்சி(42), இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெள்ளையன், வெள்ளச்சி இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் சரியான அளவிலேயே டம்ளரில் உற்ற வேண்டும் என்று வெள்ளச்சி கூறியுள்ளார்.

அனால் வெள்ளையன் தனக்கு கொஞ்சம் அதிகமாக உற்றி குடித்துள்ளார், போதை தலைக்கேறிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்ப்பட்டுள்ளது.

எனக்கும், சமமாக சரக்கு உற்ற வேண்டும் என்று கேட்ட வெள்ளச்சியிடம், வெள்ளையன் தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றி, கை கலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெள்ளையன் அரிவாளால் வெள்ளச்சியை வெட்டியதோடு, கழுத்தை இறுக்கி உள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே வெள்ளச்சி பரிதாபமாக இறந்துள்ளார்.

பின்னர் போதை தெளிந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில், வெள்ளையன் பெலாக்காடு வி.ஏ.ஒ. செந்தில்குமாரிடம் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளையன் கைது செய்யப்பட்டார். கொலையான வெள்ளச்சி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.