ரோட்டில் வீசப்பட்ட ஜெயலலிதா படம் பொறித்த ‘டீசர்ட்’

Written by vinni   // November 27, 2013   //

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த டீசர்ட்டை அதிமுக கட்சியினர் ரோட்டில் வீசியுள்ளனர்.
ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இதனால் திமுக- அதிமுக கட்சிகள் உச்சகட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்காடு சுரக்காப்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் வேட்டி- சேலை, டீசர்ட் ஆகியவை கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு தாசில்தார் மகேஸ்வரன் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கிருந்த அதிமுகவினர் ஜீப்பில் வைத்திருந்த பார்சலை ரோட்டோரம் தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டனர்.

பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிமுக கரை வேட்டி 30, 28 சேலை, முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 30 டீசர்ட், 59 மப்ளர் ஆகியவை இருந்தது.

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் துணி பார்சலை வீசி சென்ற வாகனத்தின் வண்டி நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.