சிறந்த மனிதர் இடத்தில் மோடி

Written by vinni   // November 26, 2013   //

Narendra-Modi_15அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிக்கை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.
டைம்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர் விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. இதற்கான பட்டியலில் உலகின் 42 முக்கிய பிரபலங்கள் உள்ளனர்.

அவர்களில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளார்.

தற்போதுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு பெருகி உள்ளது. இதனால், அவர் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விருது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.


Similar posts

Comments are closed.