நியூசிலாந்து தொடரிலும் கெய்ல் அவுட்

Written by vinni   // November 26, 2013   //

krisகாணி, பொலிஸ் அதிகாரங்களை அரசு ஒருபோதும் வழங்காது. அதற்காகப் போராடுவதில் எந்தவித பயனும் இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட சித்திபெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வொன்று ஜிந்துப்பிட்டி விவேகானந்த சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஒரு மாகாணசபை மூலம் எமக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்ற இரண்டே இரண்டு வரப்பிரசாதங்கள் கிடைத்துள்ளன. இவற்றை அரசு ஒருபோதும் வழங்கப்போவதில்லை. அதற்காக சண்டையிட்டும் எவ்வித பயனும் இல்லை.

மேலும், மாகாண சபை மூலம் கிடைக்கபெற்றுள்ள ஏனைய வரப்பிரசாதங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து முதலானவற்றில் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிலும் மத்திய அரசு தலையிடுகின்றது. ஆகவே, எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரே வரப்பிரசாதம் கல்வி தான். – எனத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.