புலிகளை நினைவு கூருவது தண்டனைக்குரிய குற்ற

Written by vinni   // November 26, 2013   //

maveerar-thuyilidamஊடக சுதந்திரம் என்ற பெயரில், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதோ நினைவு கூருவதோ, அவர்களின் பெருமைகளைப் புகழ்பாடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஊக்குவிப்பதோ, நினைவு கொள்வதோ, சட்டவிராதமானது.

இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


Similar posts

Comments are closed.