13 அரசமைப்புக்கு அமைய அதிகாரத்தை வழங்குங்கள்

Written by vinni   // November 26, 2013   //

gov-13தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. அதே போன்றே 13 ஆவது அரசமைப்புத் திருத்தமும் செய்யப்பட்டது. இதற்கிணங்க 13ஆவது அரசமைப்பின்படி அதிகாரங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி, பள்ளேகலையில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நான் தமிழ் மக்களைப் பற்றியும் முஸ்லிம் மக்களைப் பற்றியும் பேசுகின்றேன். அதனால் நான் இனவாதி ஆகிவிடுவேனா? மத்திய மாகாண மக்களின் நிதியில் நடத்திய கூட்டங்களுக்கான செலவு 60 கோடி ரூபா. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் ஏதாவது என்றாவது நடைபெற்றதா?
மத்திய மாகாண சபை மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை திருப்திகரமாகவும் முறையாகவும் செய்வதாகத் தெரியவரவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் சமர்ப்பிக்கின்ற பிரேரணைகள் தொடர்பான எந்தவித தகவல்களும் அது நிறைவேற்றப்பட்ட பின் வெளியிடப்படுவதில்லை.
பிரேரணைகள் தொடர்பாக எந்தவித மீள் பரிசீலனைகளும் செய்யப்படுவதில்லை. உரிய அதிகாரிகளும் இவை தொடர்பாக சபைக்கு அறிவிப்பதில்லை – என்றார்.


Similar posts

Comments are closed.