தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்! யாழில் குவிக்கப்பட்ட இராணுவம்

Written by vinni   // November 26, 2013   //

2059568067armyயாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் நாளை மாவீரர் நாள் என்பன அனுஷ்டிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் நேற்று மாலை முதல் யாழ். நகர் மட்டுமன்றி கிராமப் புறங்களிலும் திடீரென இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து ரோந்து நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.