சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம்! தமிழக அரசு

Written by vinni   // November 26, 2013   //

sIVAJIமெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றமானது தமிழக அரசிடம் கோரிக்கை மனு விடுத்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால் இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும் இதனால் அநதச் சிலையை அகற்றலாம் எனவும் பதில் அளித்துள்ளது.


Similar posts

Comments are closed.