பிரிய மனமில்லாமல் தற்கொலை செய்து கொண்ட தம்பதி

Written by vinni   // November 26, 2013   //

love_feel_001.w245பிரான்சில் ஒருவரையொருவர் பிரிந்து வாழ மனமில்லாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பிரான்சை சேர்ந்த பெர்னர்டு(வயது 86), இவரது மனைவி ஜியார்ஜெட்(வயது 86) இருவரும் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினர், கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதாவது வலியில்லாமல் உயிரை குடிக்கும் மருந்துகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளனர்.

மறுநாள் காலையில், இவர்களது அறைக்கு பணியாளர் சென்ற போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் வந்து விசாரணை நடத்தினர். இவர்களது சடலங்களுக்கு அருகே, இரண்டு கடிதங்கள் இருந்துள்ளன.

ஒரு கடிதத்தில், பிரான்சின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மற்றொரு கடிதத்தில், யாராவது ஒருவர் இறந்தாலும் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார். மரணத்தை காட்டிலும் தனிமையில் வசிப்பது கொடூரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மிக மோசமான நிலையில், கோமா நிலையில் உள்ளவர்களை மருத்துவர்களின் அறிவுரைப்படி கருணைக் கொலை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.