ஜெயபாலன் இன்று நோர்வே நோக்கி பயணிக்கிறார்

Written by vinni   // November 26, 2013   //

356079281Untitled-1தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விசா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் மிறியானை தடுப்பு முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் நடிகருமான வ.அ.ச. ஜெயபாலன் இன்று நாடுகடத்தப்படவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மிறியானை தடுப்பு முகாமில் சந்தித்து கலந்துரையாடிய வேளை இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக பிரபா கணேசனது செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பு முகாமில் தன்னை எவ்வித அசௌகரியமும் இன்றி கண்ணியமாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடாத்தினார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் உள்ள இவரது பாரியாரிடம் இன்றைய சந்திப்பு குறித்தும் அவரது நோர்வே வரவு குறித்தும் தொலைபேசியில் எடுத்துக் கூறினார்.

இன்று 26.11.2013 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும் (TK731 Turkis) இலக்க விமானம் மூலம் துருக்கி வழியாக பயணமாகி நாளை முற்பகல் 27.11.2013 நோர்வே சென்றடைவார் எனவும் எச்.எச்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்


Similar posts

Comments are closed.