“இதயத் தீவு” ஏஞ்சலினாவின் காதல் பரிசு

Written by vinni   // November 26, 2013   //

angelina_jolie_003பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி, தனது காதலனுக்கு ரூ.120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசாக அளிக்க உள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் காதலன் பிராட் பிட்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கின்றனர், 6 குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிராட் பிட் தனது 50வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 18ம் திகதி கொண்டாட உள்ளார்.

இதற்காக தனது காதல் பரிசாக ஏஞ்சலினா ஜோலி இருதய வடிவிலான ஒரு சிறிய தீவை பரிசளிக்க உள்ளார்.

இது அமெரிக்காவின் பெட்ரா போஸ்ட்ஸ் பகுதியில் உள்ளது, இங்கு பிராட் பிட்டுக்கு மிகவும் பிடித்தமான கட்டிட கலை நிபுணர் பிராங்க் லியோட் ரைட் வடிவமைத்த 2 பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளார்.

இவற்றின் மதிப்பு ரூ.120 கோடியாகும். இயற்கை எழில் கொஞ்சும் இத்தீவுக்கு, மேன்ஹட்டன் நகரில் இருந்து 15 நிமிடத்தில் செல்ல முடியும்.


Similar posts

Comments are closed.