தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

Written by vinni   // November 26, 2013   //

thailand_protests_001தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள், நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பாங்காக்கில் நேற்று திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்குள்ள நிதியமைச்சக அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை விரட்டியடித்தனர்.

இன்றையதினம் அனைத்து அமைச்சக அலுவலகங்களை கைப்பற்றப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

நிலைமை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, பாங்காக்கில் அவசரநிலையை பிரகடனம் செய்து அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் உத்தரவிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.