உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை!

Written by vinni   // November 26, 2013   //

muslimஉலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, இந்நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.