ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 104 வயது மூதாட்டி

Written by vinni   // November 26, 2013   //

voteமத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின், சட்டசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்தியாவிலேயே ஆண்களைவிட பெண் வாக்காளர்களை கொண்ட ஒரே மாநிலமாக மிசோரம் அறியப்படுகிறது.

சுமார் 11 லட்சம் மக்கள்தொகை கொண்ட மிசோரமில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 333 பெண்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ஆண்களும் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். ஆண்களை விட 9 ஆயிரத்து 806 பெண் வாக்காளர்களை கொண்ட மிசோரம் தனி சிறப்பை பெற்றுள்ளது.

இந்த சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சம்பாய் மாவட்டம் லெங்டெங் தொகுதியை சேர்ந்த 104 வயது மூதாட்டி கிம்சாவ்ங்கி என்பவர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஒப்புயர்வில்லா ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.

இதேபோல், 103 வயதை நிறைவு செய்த லியன்ஹெலி என்ற மூதாட்டியும் நேற்று வாக்களித்தார்.


Similar posts

Comments are closed.