சிறுநீரகக் கோளாறால் அதிகரிக்கும் உயிரிழப்பு

Written by vinni   // November 26, 2013   //

human kidneys-701சிறுநீரகக் கோளாறால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
சஞ்சீவ் பாணிக்ரஹி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

சிறுநீரக செயலிழப்பு, கோளாறு போன்றவற்றால் நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு பேரும், நாளொன்றுக்கு 547 பேரும், வருடத்துக்கு இரண்டு லட்சம் பேரும் உயிரிழந்து வருகிறார்கள்.

இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் 70 லட்சத்துக்கு அதிகமானோர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதில், 22.5 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

“நாடு முழுவதும் சிறுநீரகக் கோளாறு சிகிச்சைக்காக அரசிடம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் இயந்திரங்கள் இருக்க வேண்டும். ஆனால், 20 சதவீத இயந்திரங்கள் மட்டுமே உள்ளன’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டம் தோறும் சிறுநீரகக் கோளாறு சிகிச்சை மையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.