மன்னாரில் பறந்தது புலிக்கொடி

Written by vinni   // November 25, 2013   //

unnamed-174எதிர் வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர்(கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான ‘புலிக்கொடி’ ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தகவழரிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இராணுவம்,பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர்.

தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இராணு புலனாய்வுத்துரையினர் குறித்த சம்பவத்தை முடிமறைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை மன்னார் காவல் துறையினர் மறுத்துள்ளனர்.அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.