மாவீரர்களை நினைவு கூரக்கோரி யாழ் பஸ் நிலையத்தில் துண்டுப்பிரசுரம்

Written by vinni   // November 25, 2013   //

theelepanதாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு கூரக் கோரி யாழ், மத்திய பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளன. இத் துண்டு பிரசுரங்கள் நேற்றும் நேற்று முந்தினமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அத்துண்டுப் பிரசுரங்களில் விடுதலையினை நோக்கமாக கொண்டு களமாடி உயிர் நீத்த எம் மாவீரர்கள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். எம் முச்சுக் காற்று உள்ளவரை எம் மாவீரர்களை மறவோம். என எழுதப்பட்டுள்ளதோடு மாவீரர்களின் கல்லறைகள், கார்த்தீகைப் பூ ஆகியவற்றின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.