சாலையில் திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 25, 2013   //

us_aircraft_carrier_001சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக ‘செஸ்னா’ விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.

வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இயந்திரம் இயக்கம் முற்றிலுமாக நின்றுவிட்டது.

அவ்வேலையில் விமானம் கம்பர்லேண்ட் நெடுஞ்சாலைக்கு மேலே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தது. உடனடியாக தரையிறங்கா விட்டால் விமானம் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் எனனபதை உணர்ந்த விமானி, வாகன போக்குவரத்து மிகுந்த போர்ட்லேண்ட் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார்.

விமானம் சாலையில் இறங்குவதை கண்ட இதர வாகன ஓட்டிகள் திகைத்துக் போய் தங்களது வாகனங்களை ஓரம்கட்டி விட்டு விமானம் செல்ல வழி விட்டனர்.

விமானத்தின் இயந்திரம் இயக்கம் இழந்து சில கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்றது.

எனினும் இந்த சம்பவத்தினால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WHDH-TV 7News Boston


Similar posts

Comments are closed.