சமஉரிமை வேண்டும்: டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் போராட்டம்

Written by vinni   // November 25, 2013   //

in_girlsஇந்திய சட்டங்களின்படி, ஓரினச்சேர்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாசத்திற்குரிய கடும்குற்றமாக முன்னர் கருதப்பட்டது.

இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லி உயர்நீதி மன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கையில் தவறில்லை என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் முறை நம் நாட்டின் பல பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது.

எனினும், சமூகத்தில் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆண் மற்றும் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் சமஉரிமைய நிலைநாட்டவும், இந்த சமூகம் தங்களை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தலைநகர் டெல்லியில் நேற்று நூற்றுக் கணக்கான ஆண்-பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி நடத்தினர்.

ஜந்தர் மந்தர் பகுதியில் வானவில்லின் நிறங்களை கொண்ட கொடிகளை ஏந்தி, மேளதாளம் முழங்க சென்ற அவர்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

 


Similar posts

Comments are closed.