விற்பனைக்கு வருகிறது சச்சின் தங்க நாணயம்

Written by vinni   // November 24, 2013   //

sachin_gold_coin_002கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(வயது 40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்று விட்டார்.  மத்திய அரசும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்து கவுரவித்தது.

இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த நகை விற்பனை நிறுவனம் ஒன்று, சச்சின் உருவத்துடன் கூடிய தங்க நாணயங்களை சில்லரை விற்பனைக்காக வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக 3,000 நாணயங்கள் தயாராகி வருகிறது.  தவிர, இணையதளத்தின் மூலம் பதிவு செய்பவர்களுக்கான விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது.  இதேபோல மும்பையை அடிப்படையாக கொண்ட நிறுவனம் 10 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயங்கள் வெளியிட்டுள்ளது.  இணையதளத்தில் 20 கிராம் சச்சின் வெள்ளி காயின் ரூ. 2,499க்கு கிடைக்கிறது, 200 கிராம் காயின் ரூ. 16,899 வரை விற்கப்படுகிறது.  இதுவரை 800 எண்ணிக்கையில் இணையதளத்தில் விற்பனை ஆகியுள்ளன.


Similar posts

Comments are closed.