அமெரிக்காவின் சூப்பர் ஜோடி

Written by vinni   // November 24, 2013   //

america_couple_002அமெரிக்காவின் மிக நீண்ட நாள் வாழும் தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ளனர் ஆனி- ஜான்.
கடந்த 1932ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆனியை பெண் பார்க்க வந்துள்ளனர்.

அவருக்கும், ஆனிக்கும் இடையே 20 வருட வயது வித்தியாசமாம்.

இதனால் வெறுத்துப் போன ஆனி, தன் நண்பர் ஜானியின் உதவியை நாடியுள்ளார்.

மறுநாள் இருவரும் சென்று நியூயார்க்கில் உள்ள சர்ச்சில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வருகிற 25ம் திகதியுடன், இவர்களுக்கு 81வது திருமண நாள். இன்று ஜானுக்கு வயது 102, ஆனுக்கோ 98.

அமெரிக்காவின் மிக நீண்ட நாள் வாழும் தம்பதிகள் என்ற பெருமை அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல், கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

வாசல் கதவை தட்டிய இளைஞர்கள், இளம்பெண்கள் கைகளில் பூச்செண்டுகள், பரிசுகளுடன் “மிக நீண்ட நாள் காதல் தம்பதி” என்று கோஷமிட்டு வாழ்த்தி இவர்களிடம் ஆசி பெற்று சென்றுள்ளனர்.

இதுபற்றி ஜான் கூறுகையில், ஆனுக்கு அப்போது 17 வயது, எனக்கு 21.

ஒரே தெருவில் இருந்தோம், அவள் பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாலும், காதல் ஏற்பட்டதே இல்லை.

என் கார் மீது அவளுக்கு அவளுக்கு அப்படி ஒரு காதல், என் மீது காதல் வந்ததற்கு கார் கூட ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

இன்று வரை நாங்கள் இருவரும் ஜோடியாக தான் காரில் எங்கும் போய் வந்திருக்கிறோம்.

அவள் தனக்கு 20 வயது வித்தியாசமுள்ள மாப்பிள்ளையை பார்த்திருக்கின்றனர் என்று சொல்லி அழுதாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, வேகமாக முடிவெடுத்தேன்.

இருவரும் நியூயார்க் ஓடிப்போய் நண்பர்கள் உதவியுடன் மணமுடித்தோம். ‘இந்த திருமணம் ரொம்ப நாள் தாங்காது’ என்றார் ஆனின் அத்தை.

என் மாமனார் எங்களை அறவே ஒதுக்கியும் விட்டார். எங்களுக்கு கவலை என்றால், எங்களின் நான்கு பெண்களில் ஒரு பெண் இறந்தது.

ஒரே செல்ல பிள்ளை கேன்சரில் இறந்தது தான், எத்தனை வயதானாலும் அந்த சோகம் மறையாது என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஆன் கூறுகையில், அந்த 17 வயதில் நான் சொன்னதும் ஜான் அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழியில்லாமல் முடிவு செய்தார்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து தான் என் குழந்தைகளை என் பெற்றோர் பார்த்து விசாரித்தனர்.

இப்போதும் நான் இல்லாமல் அவர் கார் ஓட்ட மாட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.