அமெரிக்கா வருமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒபாமா அழைப்பு

Written by vinni   // November 24, 2013   //

amaricaஅமெரிக்கா வருமாறு பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹொலாந்தைக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்தாண்டு பெப்ரவரி 11ம் திகதி அமெரிக்கா வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி கூறியதாவது.

“நானும் எனது மனைவி மிஷெலும், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹொலாந்த் மற்றும் அவரது மனைவி வேலரி டிரியர்வீலர் ஆகியோரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலாந்துக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்படவுள்ளது.

இந்த வருகையின் போது அமெரிக்கா-பிரான்ஸ் ஆகிய இருநாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது’ என்று ஒபாமா தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.