பில் கிளிண்டனுக்கு “விடுதலை விருது” (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 24, 2013   //

freedom_medal_004அமெரிக்க குடியரசுத் தலைவர் வழங்கும் விடுதலை விருது முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு வழங்கப்பட்டது.
வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்த அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் விடுதலை விருது(Medal Of Freedom) வழங்கப்படுகிறது.

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 22ம் திகதி பகல் 1 மணியளவில், டல்லாஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியால் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் கையால் ஒருவருக்கு கூட விருது வழங்க முடியவில்லை.

முதல் விருது வழங்கும் விழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் இறந்த ஐம்பதாவது நினைவு நாள் நேற்று முன்தினம் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

கென்னடி அறிவித்த விருது விழா, அவரது மறைவு தினத்தையொட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கும் தருணம் தனக்கு மகிழ்ச்சியான ஒன்று என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பில் க்ளிண்டனுக்கு அரசியலில் அரும் பெரும் சாதனை புரிந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

முன்னதாக கென்னடி நினைவிடத்தில் ஜனாதிபதி ஒபாமா, மிஷல் ஒபாமா, பில் க்ளிண்டன், ஹிலரி க்ளிண்டன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியும் அவரது குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள்.


Similar posts

Comments are closed.