தாயின் அலட்சியத்தால் சிறுவன் மரணம்

Written by vinni   // November 24, 2013   //

mother_arrest_002கனடாவில் தாயின் அலட்சியப் போக்கால் 7 வயது சிறுவன் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி என்ற இடத்தை சேர்ந்தவன் றயன் லொவெட்(வயது 7).

இச்சிறுவன் தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

இதனை கண்டுகொள்ளாமல், சிறுவனுக்கு இயற்கை வைத்தியங்களை அளித்த காரணத்தால், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து சரியாக கவனம் எடுக்காமல் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், தாயின் அலட்சியப் போக்கே சிறுவன் உயிரிழந்ததற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வலிப்பு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக 10 நாட்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளான் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளான் என்றும் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.