டோனியை மிஞ்சிய உலக சாம்பியன்

Written by vinni   // November 24, 2013   //

MS-Dhoni-001உலக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன், இந்திய அணியின் அணித்தலைவர் டோனியை மிஞ்சியுள்ளார்.
சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்(வயது 43), நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சனிடம்(வயது 22) வீழ்ந்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ. 8.40 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது, ஆனந்துக்கு ரூ. 5.60 கோடி தரப்படும்.

இவர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை வைத்து கணக்கு பார்த்தால், கார்ல்சனின் ஒரு நகர்த்தலுக்கு தோராயமாக ரூ. 2 லட்சம் வரை கிடைத்தது.

ஆனந்தை பொறுத்தவரையில் ரூ. 1.30 லட்சம் வரை பெறுகிறார்.

கடந்த 2008ம் ஆண்டில் சென்னை அணிக்காக பங்கேற்ற டோனி அதிகபட்சமாக ரூ. 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

44 நாட்கள் நடந்த இத்தொடரில், 14 போட்டிகளில் பங்கேற்ற இவர் 414 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்படி டோனி எடுத்த ஒவ்வொரு ஓட்டத்தின் மதிப்பு அப்போது ரூ. 1.5 லட்சம்.

இப்போது கார்ல்சன், ஒரு நகர்த்தலுக்கு ரூ. 2 லட்சம் வாங்கி, டோனியை முந்தியுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் கார்ல்சன் பல்வேறு செஸ் போட்டிகள் மூலம் ரூ. 25.15 கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.