மர்மமான முறையில் கல்லூரி மாணவி மாயம்

Written by vinni   // November 24, 2013   //

Missing_promo_Titlecardஉத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

புது டெல்லியின் கீதாஞ்சலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி யோகா தொடர்பான பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் சார்பிலும், காணாமல் போன மாணவியின் பெற்றோர் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.